Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் வீடு…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வழுவூர் வடக்குத் தெருவில் கூலி தொழிலாளியான பார்த்தசாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் புது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பார்த்தசாரதியின் கை  எதிர்பாராதவிதமாக மின் வயரில் பட்டுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட பார்த்தசாரதியை அருகிலிருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து பார்த்தசாரதியின் மனைவி துர்கா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |