Categories
உலக செய்திகள்

அதிரடி உத்தரவு…! மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. ஷாக்கான பொதுமக்கள்….!!

ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் கொரோனா தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள்.

அதன்படி ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஓமிக்ரானை முன்னிட்டு சில கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மதுபானம் மற்றும் இரவு நேர விடுதிகளில் பொது மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அடுத்த மாதம் வரை அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |