வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 79.26 முதல் 237.78 வரை மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை நேரடியாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் சிலருக்கு மானிய தொகை வரவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. அதற்கு சில காரணங்கள் உள்ளது. அதாவது சரியான வங்கிக் கணக்கு எண்ணை வழங்காமல் இருப்பது, LPG ஐடியை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காமல் இருப்பது, ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைக்காமல் இருப்பது மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த மானிய தொகை கிடைக்காது. அதனைத் தொடர்ந்து உங்களுக்கு மானியம் பணம் வருகிறதா என்பதனை அதிகாரப்பூர்வமான இணையத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
- http://mylpg.in/index.aspx என்ற வெப்சைட்டில் சென்று உங்களுடைய LPG ஐடியை உள்ளிடவும்.
- நீங்கள் எந்த நிறுவனத்தின் LPG சிலிண்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அது தொடர்பான விவரங்களையும் பதிவிட வேண்டும்.
- அடுத்ததாக, உங்களுடைய 17 இலக்க LPG ஐடியை உள்ளிட்டு மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ’proceed’ கொடுக்க வேண்டும்.
- இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அடுத்து உங்களுடைய ஈமெயில் ஐடியை உள்ளிட வேண்டும். பாஸ்வர்டை பதிவிட்டதும், உங்கள் ஈமெயில் ஐடிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, mylpg.in அக்கவுண்டில் உள்நுழைந்து பாப்-அப் செய்தியில் உங்களுடைய விவரங்களை உள்ளிடவும். இப்போது View Cylinder Booking History / Subsidy Transfer என்ற வசதியை கிளிக் செய்யவும்.
இதில் உங்களுக்குத் தேவையான விவரங்கள் இருக்கும்.