மராட்டிய மாநிலம் நாக்பூரி பரோமிதா முகர்ஜி என்பவர் வசித்துவருகிறார். இவர் தோழி சுரபிமித்ரா ஆவார். இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்து ஒன்றாக பழகி, டாக்டருக்கு படித்து வந்தவர். அதனால் அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர். லெஸ்பியனாக மாறிய அவர்கள் இருவரும் ஒருவர் மீது உயிரையே வைத்துள்ளனர். தற்போது இவர்கள் நாக்பூரில் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எனவே வாழ்க்கையின் கடைசி வரை சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் பரோமிதா கூறியது, நானும் மித்ராவும் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதை ஒளிவுமறைவின்றி என்று தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2013 ஆம் ஆண்டு தனது தந்தையிடம் எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது என்பதை சொல்லி விட்டேன்.
சமீபத்தில் தன் தாயாரிடம் இதை பற்றி கூறியபோது அவர் மிகவும் ஆத்திரமடைந்தார். அதன் பிறகு எனது தந்தை மூலம் தாயாருக்கு புரிய வைத்தேன். தற்போது அவர்கள் எனது திருமணத்திற்கு சம்மதித்தனர்.இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு நிச்சயம் எங்கள் திருமணம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து டாக்டர் சுரபிமித்ரா கூறியது, எனது குடும்பத்தில் நான் லெஸ்பியனாக இருப்பது தெரியும். எனவே எனது திருமணத்திற்கு அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.நான் உளவியல் படித்தவள், மக்களின் மனநிலை எனக்கு நன்றாக தெரியும். நீண்ட ஆலோசனைக்கு பிறகு நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளோம். மேலும் கடைசி வரை நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர்களுக்கு கடந்த டிசம்பர் 29 தேதி நாக்பூரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்படி இருவரும் மாலை மாற்றிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் இருவரது வீட்டு உறவினர்கள் திரளாக கலந்துகொண்டு லெஸ்பியன் தம்பதியர்களை வாழ்த்தினார்கள்.