Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் பேச்சு… பார்த்து சிரிப்பதா..! வேதனை படுவதா..! திமுக அமைச்சர் ஆதங்கம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  ஆளுநர் உரையில் அரசின் உடைய கொள்கை திட்டங்களாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக அதை ஏற்றுக் கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளது. அரசின் அறிவிப்புகளை எல்லாம் ஆறு மாத காலத்திலே செய்திருக்கக்கூடிய செயல் திட்டங்களை  கேட்டுக் கொண்டு உட்கார்ந்து இருந்தால் சரிப்பட்டு வராது.

நாம் அரசியல் செய்யமுடியாத நிலை தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பட படபடப்பில் எதிர்க்கட்சியினுடைய தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர்  வெளிநடப்பு செய்திருக்கின்றார்கள். வெளிநடப்பு செய்வதில் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. எதிர் கட்சி தங்களுடைய  ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறது, அதிலே அவர்கள் வெளிநடப்பு செய்வதிலே ஆச்சரியப்படுவதற்கோ, அதிருப்தி கொள்வதற்கோ எதுவுமில்லை.

ஆனால் வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொய் உரைகளினுடைய முழுத் தொகுப்புரையாக தன்னுடைய கருத்துக்களை இந்த ஆட்சியின் மீது, இங்கே அவிழ்த்துவிட்டு சென்றிருக்கிறார் என்பதை பார்க்கும்போது, எனக்கு அதை பார்த்து எண்ணி சிரிப்பதா அல்லது அல்லது வேதனை கொள்வதா என்று தெரியவில்லை என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |