Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற தம்பதி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியில் நடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்வேலியில் அரசுக்கு சொந்தமுடைய நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நடேசன் தனது மனைவியுடன் வீணங்கேணியில் இருக்கும் மகளைப் பார்ப்பதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது வீணங்கேணி பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கு உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அந்நேரம் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து நடேசன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நடேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |