நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கடைகள் செயல்படாது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனை மற்றொரு தேதியில் வழங்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.