உரக்கடை உரிமையாளரிடம் 9 லட்சம் மோசடி செய்த அக்காள், தம்பி என 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி மெட்டு பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் இவரது கடையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு கடையில் இருந்து 7 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனின் சகோதரி மீனா மற்றும் அவரது கணவர் குமார் ஆகியோர் முனியப்பனின் கடையில் 1 லட்சம் மதிப்புள்ள பூச்சி மருந்துகளை வாங்கி விட்டு அதற்கான பணத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து முனியப்பன் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. எனவே முனியப்பன் இதுகுறித்து போடி குரங்கணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணிகண்டன், மீனா, குமார் மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மணிகண்டனின் மனைவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.