பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பிரதமர் வெறும் 15 நிமிடம் காரில் காத்திருந்ததை தேசிய அளவில் பெரிதாக பேசி வருகிறார்கள்.
ஆனால் டெல்லியில் விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக பனியிலும், வெயிலிலும், மழையிலும் வாடினார்கள். அவர்களின் கஷ்டத்தை யாரும் புரிந்து கொள்ள வில்லையா ? ஏன் இந்த இரட்டை நிலை ? என்று கேள்வி கேட்டு மோடியை சரமாரியாக சாடியுள்ளார்.