நடிகர் தனுஷின் வாத்தி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
அந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். வாத்தி படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படங்களில் தனுஷ் தாடி, மீசை இல்லாமல் சின்னப் பையன் போன்று இருந்தார். இந்நிலையில் வாத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது.
இதையடுத்து வாத்தி படத்தின் சில புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதைபார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, “தனுஷின் ஃபிட்னஸை பாருங்க மக்களே. மனிதர் எப்படி கெத்தாக இருக்கிறார். இதெல்லாம் நியாயமே இல்லை தனுஷ் அண்ணா. இப்படி சின்னப் பையன் மாதிரி இருக்கீங்களே.
வாத்தி கண்டிப்பாக ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள்.”தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அதனாலேயே வாத்தி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.இந்த படத்தையாவது ஓடிடியில் அல்லாமல் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.