Categories
அரசியல் மாநில செய்திகள்

நன்றி சொல்றமாரி சொல்லி….. அதிமுகவை கிழித்து எடுத்த மு.க.ஸ்டாலின்…. இதுக்கு பேர்தா ரிவென்ஞ்சா தலைவரே…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு வழங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார்.

இது போன்ற பட்டியலை படிக்க வேண்டும் என்றால் என்னிடம் எக்கச்சக்கமாக உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட சட்டமன்ற-தலைமை செயலக வளாகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார் ? ரூ. 170 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முயற்சித்ததும் பராமரிக்காமல் பாழடைய வைத்ததும் யார் ? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதோடு மட்டுமில்லாமல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கீழ் இருந்த கலைஞர் பெயரை மறைத்தது யார் ?செம்மொழிப் பூங்காவில் கலைஞர் பெயரை மறைத்து பராமரிக்காமல் விட்டது யார் ? கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் கலைஞரின் பெயரை நீக்கியது யார் ? ராணி மேரி கல்லூரியில் கலைஞர் அரங்கத்தின் பெயரை நீக்கியது யார் ? கடற்கரை பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார் ? உழவர் சந்தைகளை மூடியது யார் ? பெரியார் பெயரில் அமைந்த சமத்துவபுரங்களை பாழ்படுத்தியது யார் ? என்று கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி ஈபிஎஸ்ஸை ஆஃப் செய்தார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்-ஐ முடக்கியது யார் ? மதுரவாயல்-சென்னை துறைமுக உயர்மட்ட சாலை திட்டத்தை முடக்கியது யார் ? அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், வரும் முன் காப்போம் திட்டம் ஆகியவற்றை கிடப்பில் போட்டது யார் ? 7-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நாடகக் கலை குறித்த பாடலில் இருந்த கலைஞரின் பெயரை ஸ்டிக்கர் வைத்து மூடி மறைத்தது யார் ? என்று கேட்டார்.

அதேபோல் சமச்சீர் கல்வி பாடபுத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி பாடலை மறைத்தது யார் ? என்று வரிசையாக நீண்ட நேரம் என்னால் கேள்வி எழுப்ப முடியும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் கலைஞர் பெயரில் உள்ள திட்டங்கள் மாற்றப்பட்டதால் தான் ஆதங்கத்தில் அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன ? என்று முனைவர் கேள்வி எழுப்பினார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அம்மா உணவகம் எதுவும் மூடப்படக்கூடாது என்று தான் நான் நினைக்கிறேன் என்று முதல்வர் கூறினார்.

Categories

Tech |