பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 160 வாத்துகள் மொத்தமாக கொல்லப்பட்டுள்ள நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்தது போல் இருப்பதாக அத்தொற்றால் பாதிப்புக்குள்ளான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 79 வயதாகும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான Alan என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இங்கிலாந்து நாட்டிலேயே முதன்முறையாக பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி அவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்த 160 வாத்துகளுக்கும் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த 160 வாத்துகளும் பாதுகாப்பு காரணமாக கொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் 160 வாத்துகளும் கொல்லப்பட்டது தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தது போல் இருப்பதாக மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் 20 ஆண்டுகளாக தான் அந்த வாத்துகளுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாங்கமுடியாத இழப்பினால் தனிமையிலிருக்கும் நான் “ஒரு பிணவறையில் இருப்பது போல உணர்கிறேன்” என்று மிகுந்த வருத்தத்துடன் கண்கலங்கி கூறியுள்ளார்.