Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பக்காவாக திட்டம் போட்டு…. நிலத்தை அபகரித்த கும்பல்…. பெண் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு….!!

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த பெண் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் செல்வராணி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வேலுதேவர் என்பவர் அவருக்கு சொந்தமான 1140 சதுர அடி நிலத்தை செல்வராணிக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனாலும் செல்வராணி பட்டா மாற்றம் செய்யாமல் வேலுத்தேவர் பெயரிலேயே நிலத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே பார்த்திபனூர் மொசுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், அவரது மனைவி கனகவல்லி மற்றும் அருங்குளம் பகுதியை சேர்ந்த கணேசன் ஆகியோர் வேலுத்தேவரின் பெயரை வைத்து ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். மேலும் அவரது நிலத்தில் இனாம் செட்டில்மெண்ட் செய்ததுபோல் போலி ஆவணங்களை தயார் செய்து அவர்களுக்குள்ளேயே 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து நிலத்தை அபகரித்து கொடுள்ளனர்.

இதற்கு அபிராமம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த செல்வராணி அதிர்ச்சி அடைந்து உடனடியாக மாவட்ட காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நில மோசடியில் ஈடுபட்ட ராஜகோபால், கனகவல்லி, கணேசன், சத்யராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |