பயனாளர்களின் குக்கீஸ்களை அனுமதியின்றி பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் நாடு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
பிரான்சில் பிரபல இணையதள நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் பயனாளர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர்களில் இணையதளத்தின் செயல்பாடுகளை சேமிக்கும் முறையான குக்கீஸ்களை அனுமதியின்றி விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளது.
ஆகையினால் பிரான்ஸ் அரசாங்கம் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு மொத்தமாக 210 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது.
மேலும் 3 மாதத்திற்குள் அனுமதியின்றி எடுத்த பயனாளர்களின் குக்கீஸ்களை மாற்றி அமைக்கவில்லையென்றால் தினந்தோறும் ஒரு லட்சம் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.