Categories
தேனி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு…. பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்…. கணவர் அதிரடி கைது….!!

கள்ளகாதலை கண்டித்த பெண் கவுன்சிலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கடமலை-மயிலை ஒன்றியத்தின் 5-வது கவுன்சிலராக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடமையிலைக்குண்டு பகுதியில் கணவர் வேல்முருகன் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வேல்முருகன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் உமா மகேஸ்வரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

மேலும் உமா மகேஸ்வரி வேல்முருகனிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வேல்முருகன் உமாமகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து உமா மகேஸ்வரி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வேல்முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |