நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தற்போது குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி 15 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் 15 – 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தவிர்த்து வேறு தடுப்பூசி செலுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வருகிறது. பாரத் பயோடெக் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கு கோவாக்சின் செலுத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே சுகாதார பணியாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட தனி நபர்களுக்கு கோவாக்சின் மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.