சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாண தலைநகரான ஹார்பின் நகரில் கடந்த 1963-ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் பனிச் சிற்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 4 லட்ச ச.மீ அளவிலான மிகப்பெரிய நிலப்பரப்பில் பிரம்மாண்டமான பனிச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கன மீட்டர் அளவிலான பனிக்கட்டிகள் 65 வகை சிற்பங்களை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் 42 மீட்டர் உயரம் கொண்ட டார்ச் ஒன்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நினைவுபடுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தெரிவிக்கும் விதமாக ஒலிம்பிக்ஸ் டார்ச் 24 படிக்கட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘Top of the fire’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பனிச் சிற்ப திருவிழா குளிர்காலம் முடியும் வரை அதாவது பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் திருமணம் மற்றும் நீச்சல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சீனாவின் ஹார்பின் நகருக்கு உலகம் முழுவதிலுமிருந்து 1 கோடி பேர் வருகை தருவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.