சென்னை குரோம்பேட்டை போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அதாவது தமிழக அரசு, இந்த தொற்றை கட்டுப்படுத்த கடந்த 6ஆம் தேதி முதல் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கை பிறப்பித்துள்ளது.. அதேபோல ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என்றும் அறிவித்துள்ளது.. மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் 240 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில், 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.. கொரோனா உறுதியானதை அடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில், குரோம்பேட்டை போத்தீஸ் மூடப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று சரவணா ஸ்டோர்ஸ்ஸில் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.