நடிகை சமந்தா ‘ஊ சொல்றியா’ பாட்டின் ரிகர்சல் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான சமந்தா ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். அவர் நடனமாடிய ‘ஊ சொல்றியா’ என்ற பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் கலக்கி வருகிறது. இந்தப்பாடல் எவ்வளவு வைரலாக பரவுகிறதோ அந்த அளவிற்கு பெரும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. மேலும் இப்பாடல் ளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
குறிப்பாக புஷ்பா படத்தின் வெற்றிக்கு இப்பாடல் மிகப் பெரிய அளவு பங்கு வகிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊ சொல்றியா என்ற பாடல் படமாக்குவதற்கு முன்பு நடிகை சமந்தா ரிகர்சல் செய்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலுக்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்து உள்ளார் என்பதை கண்டு ரசிகர்கள் அவரது வீடியோவுக்கு தங்களது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.