இளம்பெண் வீடியோ அழைப்பில் ஆபாசமாக தோன்றி வாலிபரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் வாலிபரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வீடியோ கால் மூலம் அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் வாலிபர் அந்த அழைப்பை ஏற்று பேசிய போது எதிர்முனையில் ஒரு பெண் ஆபாசமாக தோன்றியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் சுதாரிப்பதற்குள் இளம்பெண் வீடியோ அழைப்பை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த வீடியோ பதிவை ஆபாசமாக சித்தரித்த இளம்பெண் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் பணம் தரவில்லை என்றால் வீடியோவை முகநூலில் பதிவிடுவேன் எனக்கூறி அந்த பெண் வாலிபரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த வாலிபர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.