Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ரேஷன் கடையில் திடீர் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்…. ஆடிப்போன ஊழியர்கள்….!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. பச்சரிசி, வெல்லம், புளி, திராட்சை, முந்திரி உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அரசு அறிவித்ததன்படி, கடந்த ஜனவரி 3-ஆம் தேதி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைக்க வேண்டுமென்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு சரியான முறையில் மக்களுக்கு போய் சேருகிறதா என்று முதல்வர் முக. ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு நடத்தினார்.

Categories

Tech |