Categories
தேசிய செய்திகள்

ஐயா! ஜாலி ஜாலி…. ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்த நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3-ம் நிலை பாதிப்புகள் தொடங்கி இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேபோன்று கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான மைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் குஜராத் மாநிலத்தில் கோவிட் நிலையை மதிப்பாய்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் குஜராத் அரசு நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு நேரத்தை திருத்தியது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டுவந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், காந்திநகர், ஜாம்நகர், பாவ்நகர், ஆனந்த் மற்றும் நதியா ஆகிய இடங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் திருமணங்களில் அதிகபட்சமாக 400 பேர் திறந்த வெளியிலும், 50 சதவிகிதம் திறனுடன் கூடிய இடங்களிலும் நடத்தலாம் என்று மாநில அரசு உத்தரவில் கூறியுள்ளது.

மேலும் இறுதி சடங்குகளில் 100 பேரை மாநில அரசு அனுமதித்துள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் 75% திறனுடன் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது. அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |