தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் செலுத்தப்படும் என்றும், முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், இணை நோயில் உள்ள 60 வயதுக்கும் மேலான முதியோர்களுக்கு ஜனவரி 10- முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.