Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜூ மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த ராஜூ தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் ரப்பர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜூவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |