இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரத்து 65 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 231 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரத்து 65 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 988 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.