Categories
மாநில செய்திகள்

திடீரென பள்ளி மாணவனை அழைத்த ஸ்டாலின்….. என்ன பேசினார் தெரியுமா?…. வைரல் வீடியோ…!!!!

முதல்வர் ஸ்டாலின் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது வீட்டில் உடற்பயிற்சி கூடத்தில் அவர் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்கிறார். இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் சென்றார். இளைஞர்களை பின்னுக்குத்தள்ளி அட்டகாசம் செய்தபின் ஸ்டாலின் டீ அருந்தினார்.

அப்போது அங்கிருந்த சிறுவனை அழைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனிடம் ஆன்லைனில் படிக்கிறீர்களா? எந்த பள்ளியில் படிக்கிறீர்கள்? அந்தப் பள்ளி எங்கு இருக்கிறது? என்று ஸ்டாலின் கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் கோவளத்தில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கிறேன் என்று பதிலளிக்கிறார். இதையடுத்து 6-ஆம் வகுப்பு ஆன்லைனில் படிக்கிறாயா? பள்ளிக்கு சென்று விடுவாயா? என்று கேட்கிறார். அதற்கு ஆம் பள்ளிக்கு சென்று விடுவேன் என்பது போல் ஒரு வித தயக்கத்துடனே சிறுவன் பதிலளிக்கிறார்.

Categories

Tech |