Categories
சினிமா

“எனக்கு விவாகரத்து வேணும்…” அடம்பிடிக்கும் பிரபல நடிகை….மீண்டும் சேர துடிக்கும் மாஜி கணவர்….!!

நடிகை கிம் கர்தாஷியனுடன் சேர்ந்து வாழ முன்னாள் கணவரான கன்யே வெஸ்ட் விருப்பப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நடிகையும், தொழில் அதிபருமான கிம் கர்தாஷியனும், ராப்பர் கன்யே வெஸ்ட்டும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் கிம் கன்யேவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். தனக்கு விரைவில் விவாகரத்து அளிக்குமாறு சிறப்பு கோரிக்கையும் விடுத்திருக்கிறார்.

கிம் கன்யேவை விட்டு பிரிந்தால் போதும் என்றிருக்கிறார் . ஆனால் கன்யேவோ மீண்டும் கிம்முடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். கிம் வசிக்கும் பங்களாவுக்கு எதிரே வீடு வாங்க முயற்சி செய்து வருகிறார் கன்யே வெஸ்ட்.கிம் தான் எனக்கேற்ற மனைவி. விரைவில் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கன்யே தெரிவித்து வருகிறாராம்.
பிற பெண்களுடன் டேட்டிங் சென்றாலும் அதெல்லாம் நிலையானது இல்லை என்று நினைக்கிறாராம் கன்யே.கிம்மும், கன்யே வெஸ்ட்டும் திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து விவாகரத்து கோரியிருக்கிறார்கள். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |