Categories
மாநில செய்திகள்

BREAKING : வீட்டிலிருந்து பை கொண்டு வந்து பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறலாம்… தமிழக அரசு..!!

ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டிலிருந்து பையை கொண்டு வந்து பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில இடங்களில் பை தயாராக இல்லாததால் பொதுமக்கள் வீட்டிலிருந்து பை கொண்டு வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம். பரிசு தொகுப்புக்கான பை தயாரானவுடன் ரேஷன் கடைகளில் மற்ற பொருட்களை வாங்க வரும்போது அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது..

கொரோனா கட்டுப்பாடுகளால் பைகள் தைக்கும் பணிகள் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 45.1% ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |