கஞ்சா மற்றும் குட்காவை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு காவல்துறையினர் அனைத்து கடைகளிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்காவை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின் படி, அனைத்து பகுதிகளிலும் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நரோசிஜிராவ் பகுதியில் இருக்கும் மளிகை கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 27 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை அடுத்து இது தொடர்பாக சிவராம் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் இது பற்றி கூறியதாவது, இம்மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.