Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சங்கரசுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரசுதன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரசுதன் தனது நண்பரான ஆறுமுக பாண்டியனுடன் லட்சுமிமில் மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் ஹரிஹரசுதனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அதற்கு ஹரிஹரசுதன் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.

இதனால் அந்த வாலிபர் ஹரிஹரசுதனை அவதூறாக பேசி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஹரிஹரசுதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாரியப்பன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |