Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தொடர்ந்து நடக்கும் விபத்து” சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

தரைமட்ட வழுக்கு பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியில் இருந்து ஒட்டபாளையம் செல்லும் சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பெய்த கன மழையால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தரை முழுவதும் பாசி படிந்துள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தை கடந்து செல்லும் போது இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

மேலும் கடந்த 2 மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் வழுக்கு பாலத்தில் சில பேர் விழுந்து காயமடைந்து சென்றுள்ளனர். எனவே ஓடையில் தண்ணீர் நின்றவுடன் பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |