ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மணிகண்டன் கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஆட்டோவின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.