Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கட்டாயம் அணிய வேண்டும்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. காவல்துறை சூப்பிரண்டின் செயல்….!!

கொரோனா விழிப்புணர்வு பணிகளை காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் கலவை பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கொரோனா விழிப்புணர்வு பணிகளை அவர் ஆய்வு செய்துள்ளார்.

இதனை அடுத்து பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கும் முககவசம் வழங்கியதோடு, கபசுரக் குடிநீரையும் அவர் வழங்கியுள்ளார். அப்போது அவருடன் கலவை இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, சரவணமூர்த்தி மற்றும் காவல்துறை துணை சூப்பிரண்டு பிரபு மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இருந்துள்ளனர்.

 

Categories

Tech |