Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது பெற்றோர் மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ராஜா என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்துள்ளனர். மேலும் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Categories

Tech |