சகோதரரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெய்வத்தளி கிராமத்தில் விவசாயியான முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துமாணிக்கத்திற்கும் அவரது சகோதரர்களான ஆறுமுகம், சன்னாசி ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் முத்துமாணிக்கம் ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த ஆறுமுகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து மாணிக்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.