Categories
தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல்…. மார்ச் 10-ல் வாக்கு எண்ணிக்கை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 14, 3 வது கட்ட வாக்குப்பதிவு  20, 4 வது கட்ட வாக்குப்பதிவு 23, 5 வது கட்ட வாக்குப்பதிவு 27, 6 வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7 வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7 ஆகிய நாட்களில் நடைபெறும். மேலும் ஜனவரி 15 வரை அனைத்து கட்சிகளும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து,பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மேலும் மணிப்பூரில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் மற்றும் மார்ச் 3ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். இதையடுத்து பேசிய தேர்தல் ஆணையர், 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |