Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி வசித்து வருகிறாள். இவள் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முதியவர் வெள்ளைசாமி சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமியை பார்த்த பெற்றோர் அவரிடம் நடந்த விபரத்தை கேட்டுள்ளனர்.

அப்போது வெள்ளைச்சாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வெள்ளச்சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வெள்ளைச்சாமியிடம் நடத்திய விசாரணையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |