உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, 2வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14, 3வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20, 4வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 23, 5வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27, 6வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ல் நடைபெறும். ஜனவரி 15 வரை அனைத்து கட்சிகளும் தேர்தல் தொடர்பான பேரணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
Categories