Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி ….! மோகன் பகான் – ஒடிசா ஆட்டம் ரத்து….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற இருந்த ஏ.டி.கே மோகன் பாகான் – ஒடிசா மோதும் போட்டி ரத்து செய்யப்பட்டது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து  வருகிறது.இந்நிலையில் இன்றைய லீக் ஆட்டத்தில்  ஏ.டி.கே மோகன் பாகான் – ஒடிசா அணிகள் மோத இருந்தன .

 ஆனால் மோகன் பாகான் அணியில் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால்  போட்டி ரத்து  செய்யப்பட்டது.  மேலும் இந்த ஆட்டம் வேறு ஒரு தேதியில்  நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |