Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ 35,000 சம்பளத்தில் ….தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலை …. உடனே விண்ணப்பியுங்க ….!!!

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் : கிராம உதவியாளர்

காலிப்பணியிடங்கள்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள 14 கிராம ஊராட்சிகளில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில்உள்ள 8 கிராம ஊராட்சிகளில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்தில் உள்ள  2 கிராம ஊராட்சிகளில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:

வயது 01.01.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.

அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 34 ஆண்டுகள்,

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :ரூ 11,100 -35,100

தேர்வு செய்யும் முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வட்டாட்சியர்,

வட்டாட்சியர் அலுவலகம்,

பொன்னேரி / கும்மிடிப்பூண்டி / பூவிருந்தவல்லி

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2022

IMPORTANT LINKS

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/01/2022010442.pdf

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/01/2022010474.pdf

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/01/2022010699.pdf

Categories

Tech |