Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் வந்துச்சு…. இளைஞர்களுக்கு அறிவுரை…. காவல்துறை சூப்பிரண்டு ஆய்வு….!!

கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி உள்பட 5 பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும் மற்றும் பல மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபடுவதாகவும் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறை சூப்பிரண்டு மற்றும் காவல்துறையினர் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் இருந்து ரயில் நிலையம் மற்றும் நாற்றம்பள்ளி சாலை உள்பட பல இடங்களில் திடீர் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது ஜோலார்பேட்டை மினி விளையாட்டு அரங்கம் பகுதிக்கு நடந்தே சென்று ஆய்வு செய்த போது அப்பகுதியில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு சில இளைஞர்கள் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் அவர்களை பிடித்து சோதனை செய்ததில் சிகரெட் மற்றும் பீடி உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து இது போன்ற செயல்களுக்கு இளைஞர்கள் அடிமையாவது தவிர்க்க வேண்டும் என காவல்துறை சூப்பிரண்டு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து இதில் தாயை இழந்த இளைஞர் ஒருவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்க இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசியிடம் அவர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது பரோலில் வந்துள்ள பேரறிவாளனின் வீட்டிற்கு சென்று பாதுகாப்பு குறித்து அங்குள்ள காவல்துறையிடம் கேட்டறிந்துள்ளார்.

Categories

Tech |