Categories
உலக செய்திகள்

“மீண்டும் ஆபத்து?”…. சீனாவில் அடுத்த அதிர்ச்சி!…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கத் தொடங்கின. இந்த நிலையில் மக்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினை அருகில் உள்ள மாகாணங்களிலும் உணர முடிந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிலநடுக்கம் குறித்த முழுமையான தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் நூற்றுக்கணக்கான பேர் மீட்பு பணியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |