மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் நஞ்சை நிலங்கள் அமைந்துள்ளது. இந்த வயல்களின் குறுக்கே மின்கம்பங்கள் நடப்பட்டு உயர் அழுத்த மின்சாரம் பாயும் மின்கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 20 மயில்கள் நேற்று அப்பகுதிக்கு பறந்து வந்துள்ளது. அதில் ஒரு மயில் மட்டும் மின் கம்பியின் மீது மோதியது.
அப்போது மின் கம்பிகளுக்கு இடையே சிக்கி கொண்ட அந்த மயில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்துவிட்டது. இதனை பார்த்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த மயிலின் உடலை பிரேத பரிசோதனை செய்து காட்டு பகுதியில் புதைத்துவிட்டனர்.