பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிகுதிச்சான் கிராமத்தில் இருந்து விருதாச்சலம் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சரக்கு லாரி பேருந்தின் மீது மோதுவது போல தாறுமாறாக வந்துள்ளது. இதனால் பிரகாஷ் பேருந்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவியான பூமிகா, கோவிந்தன், ராஜேந்திரன், தேவ், பெருமாள் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.