நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வெள்ளி, சனி ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், விசேஷ நாட்களில் மட்டும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை புரசைவாக்கம் சி.எஸ்.ஐ எவர்ட் பள்ளியில் 15 முதல் 18 வயதினருக்கான கோவிட் தடுப்பூசி போடும் முகாமினை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், குறிப்பிட்ட நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி இல்லை என்றும், நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் வழக்கம்போல் தொடரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.