Categories
மாநில செய்திகள்

டிக்-டாக் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்…. 5 வாலிபர்களுடன் லாட்ஜில் தங்கியிருந்த பிளஸ் 1 வகுப்பு மாணவிகள்…. பகீர் சம்பவம்….!!!!

சென்னையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவிகள் இருவரையும் காணாமல் பெற்றோர்கள் தவித்துப் போனார்கள். இதுபற்றி மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தங்கள் புலன் விசாரணையை விரைவுப்படுத்தினர். அப்போது அந்த மாணவிகள் இருவரும் சென்ட்ரல் அருகே பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை காவல் துறையினர் மீட்டு அவர்களுடன் தங்கி இருந்த 5 வாலிபர்களை கைது செய்தனர். போக்சோ சட்டத்தில் அவர்களில் 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவன் சிறுவன் என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை அறிந்த மாணவிகளின் குடும்பத்தினர் நொறுங்கிப் போய் விட்டனர். இதையடுத்து அந்த மாணவிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அது என்னவென்றால், அனகாபுத்தூர் பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகள் தோழிகள். இவர்கள் அனைவரும் டிக்-டாக் ரசிகைகள். தினமும் வித்தியாசமான வீடியோ பதிவு செய்து அதை ஷேர் சாட் மூலம் வலைதளத்தில் பதிவேற்றுவது வழக்கம். இவர்களுடைய பதிவுகளை பார்த்து பலர் லைக் செய்வார்கள். இதனால் உற்சாகம் அடைந்த மாணவிகள் புதுப்புது வீடியோக்களை ஆர்வத்துடன் பதிவேற்றி வந்தனர். இதையடுத்து அந்த டிக்-டாக் மூலம் திருவொற்றியூரை சேர்ந்த சுரேஷ் என்கிற அப்பு பழக்கம் ஆகியுள்ளார்.

அந்த மாணவிகளின் வீடியோ பதிவுகளை புகழ்ந்து தள்ளிய அவன் எண்ணூர் பக்கம் வாருங்கள். கடல் அழகுடன் வீடியோ எடுத்தால் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று அவர்களிடம் கூறியுள்ளான். டிக்-டாக் மோகத்தால் பின்விளைவுகளைப் பற்றி சற்றும் யோசிக்காமல் 5 பேரும் எண்ணூறுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் வருகைக்காக காத்திருந்த அப்பு அவர்களை வரவேற்று அன்பாக பேசியிருக்கிறார். மாணவிகளும் அப்புவை ரசிகராக நினைத்து பேசியுள்ளனர். எண்ணூரில் பல இடங்களில் வீடியோ எடுத்துள்ளனர். அதையும் பதிவேற்றம் செய்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒரு மாணவியின் செல்போனை நைசாக எடுத்து வைத்துக்கொண்டார்.

எல்லோரும் விடை பெற்று வீடு திரும்பினார்கள். மாலையில் செல்போனில் தொடர்பு கொண்டு அப்பு ஒரு செல்போனை விட்டு சென்று விட்டீர்கள் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்டதும் தொலைந்து விட்டது என்று நினைத்தோம் என்று அந்த மாணவி ஒருவர் நேரில் வந்து போனை வாங்கி கொண்டார். அந்த மாணவியிடம் துணைக்கு இன்னொரு மாணவியையும் அழைத்துக்கொண்டு மீண்டும் சென்ட்ரல்-க்கு வந்துள்ளார்கள். அங்கு காத்திருந்த அப்பு அவர்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு இரவு நேரமாகி விட்டதே வாருங்கள் டின்னர் சாப்பிட்டு போகலாம் என்று அழைத்துள்ளார். அந்த மாணவிகளும் பாசத்துடன் அழைக்கிறார்கள் என்று நினைத்து சாப்பிட ஒத்துக் கொண்டார்கள்.

இதையடுத்து உயிர்தர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விதவிதமாக உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார். மாணவிகளும் அதை சாப்பிட்டுள்ளனர். நேரம் போவதே அவர்களுக்கு தெரியவில்லை. அதற்குள் அப்பு தனது நண்பர்களையும் அழைத்துள்ளார். ஜெரால்ட், சஞ்சய், வினித் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரும் வந்துள்ளனர். அவர்கள் தனது நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களும் இரவு விருந்தில் கலந்து கொண்டனர். விருந்து முடிந்து நேரத்தை பார்க்கும்போதுதான் இனி பஸ் பிடித்து செல்ல முடியாது என்பதை தெரிந்து கொண்டார்கள். இதையடுத்து மாணவிகளிடம் ஒன்றும் பிரச்சனை இல்லை. பயப்படாதீர்கள் அருகில் லாட்ஜ் ஒன்று இருக்கிறது. எங்களோடு தங்கிவிட்டு காலையில் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். தயங்கிய அந்த மாணவிகளும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லாட்ஜில் 2 அறை எடுத்து ஆளுக்கு ஒரு அறையில் தங்க வைத்து விட்டு 5 பேரும் அவர்களுடன் தங்கி இருந்துள்ளனர். முதல் நாள் இரவு முடிந்த பிறகும் மறுநாளும் அவர்களை அங்கேயே தங்க சம்மதிக்க வைத்து இருக்கின்றனர். அதற்குள் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்து தேட ஆரம்பித்ததால், மாணவியின் செல்போன் சிக்னலை ஆராய்ந்தபோது காவல்துறையினரை சம்பந்தப்பட்ட லாட்ஜில் கொன்றுவிட்டது. அங்கு காவல்துறையினர் சோதனையிட்ட போது அவர்கள் சிக்கியுள்ளனர். மீட்கப்பட்ட அந்த மாணவிகளிடம் அந்த வாலிபர்கள் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டார்களா? என்று கேட்டபோது இல்லை என்று மறுத்து விட்டனர். மாணவிகள் வெளியே சொல்ல பயப்படலாம் என்பதால் பெற்றோர்களிடம் உண்மையை கேட்க சொல்லியிருக்கிறார்கள்.

Categories

Tech |