Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் வீட்டில் மலைப்பாம்பா?… வனத்துறை அதிரடி சோதனை…!!

நடிகர் அஜித்தின் உதவியாளர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான நடிகர் அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா என்பவர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாகவும் அந்த பாம்பிற்கு தினமும் நான்கு எலிகளை உணவாக அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அறிந்த வனத் துறையினர், மதுரவாயலில் உள்ள அஜித் குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். ஆனால், அங்கு மலைப்பாம்பும், அந்த பாம்பு வளர்ப்பதற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

Image result for ajith kumar
இதனையடுத்து, திருவான்மியூரில் உள்ள அஜித்குமாரின் வீட்டில் பாம்பு வளர்ப்பதற்கு வாய்ப்புள்ளது என எண்ணி அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும், அஜித்குமாரின் மற்றொரு வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருவதாக வனத் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

Related image

வீட்டில் மலைப்பாம்பு வளர்ப்பது உறுதியானால், வனவிலங்கு சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டபோது, தான் எவ்வித மலைப்பாம்பும் வீட்டில் வளர்க்கவில்லை, சமூக வலைதளங்களில் தவறான செய்தி வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |