அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தன்னுடைய பழைய நினைவுகளை இயக்குனர் தங்கர்பச்சன் பகிர்ந்துள்ளார்.
2002ஆம் ஆண்டு வெளியான அழகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தங்கர் பச்சான். மேலும் இவர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், அம்மாவின் கைப்பேசி, மெரின் ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துமுள்ளார். இந்நிலையில் தங்கர் பச்சான் இயக்கிய அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
அழகிப் படத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ், விவேக், பாண்டு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் தங்கர் பச்சானின் நிலையில் பழைய நினைவுகளை தங்கர் பச்சான் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், “தங்கரின் அழகிக்கு வயது 20. 20வது ஆண்டுகள் உருண்டோடியதை நம்பமுடியவில்லை! அழகியின் தாக்கத்தை, நினைவுகளை யாரேனும் நாளும் பகிர்கின்றனர். சிலரின் புறக்கணிப்பால் ஏற்பட்ட அவமானங்களையும் துயரங்களையும் சாகும் வரை என்னால் மறக்க முடியாது..!” என கூறியுள்ளார்.