Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களே…. இதை மட்டும் செய்யாதீங்க…. கடும் எச்சரிக்கை…..!!!

தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் ஏதாவது மோசடி எஸ்எம்எஸ் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதாவது உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அதனை வாங்குவதற்காக இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள். மேலும் உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்களை வழங்குங்கள் என்றெல்லாம் பொய் செய்திகள் வருகிறது. அதனை போலவே வங்கியில் வரும் எஸ்எம்எஸ் போல் அனுப்பி kyc விவரங்களை வழங்குங்கள் என்று பொய் எஸ்எம்எஸ்கள் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற மோசடிகள் குறித்து வங்கி தரப்பிலும் நிறுவனங்கள் தரப்பிலும் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்து  எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “அலெர்ட்! ஏர்டெல் ஒரு போதும் 10 இலக்க மொபைல் எண்ணிலிருந்து உங்கள் அக்கவுன்ட்/ சிம் அப்டேட்டிற்காக எந்தவொரு KYC தொடர்பான எஸ்எம்எஸ் அனுப்பாது. இது போன்ற மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் அழைப்பில் எந்த ஒரு OTP அல்லது code ஐ ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |