பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சென்னி பாஜக சதி செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பிரதமர் மோடி முதலில் பஞ்சாப்பிற்கு ஹெலிகாப்டரில் வருவதாக தான் திட்டம் இருந்தது. பின்னர் திடீரென சாலை பயணத்திற்கு மாறியுள்ளார். இந்த நிலையில் பிரதமர் செல்லவிருந்த சாலையில் சிலர் மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த பாதை வழியாக பிரதமர் வருவது தெரியாது. அது பிரதமரின் பாதுகாப்பாளர்களுக்கு கூட தெரியும்.
அதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் பிரதமருக்கு முன் நின்று கோஷம் எழுப்பவில்லை. அதேபோல் யாரையும் ஒழிக என்றும் கூறவில்லை. அப்படி இருக்கும் போது பிரதமரின் உயிருக்கு எப்படி ஆபத்து வந்தது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதேபோல் பிரதமரின் கார் அருகேயும் யாரும் செல்லவில்லை. கல்லை எடுத்து கார் மீது எறியவும் இல்லை. யாரும் குச்சியை கூட கையில எடுத்து வரவில்லை.
அப்படி இருக்கும் போது பிரதமர் “உயிர்தப்பி வந்தேன்” என்று கூறுவது ஏன் ? என்று பரபரப்பாக பேசியுள்ளார். மேலும் பஞ்சாப்பில் மக்களால் நடத்தப்பட்டு வரும் ஆட்சியைக் கலைத்துவிட்டு அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் பாஜக சதி செய்து வருவதாக முதல்வர் சரஞ்சித் சிங் சென்னி குற்றம் சாட்டியுள்ளார்.